கோவில் சிலைகளை மர்மநபர்கள் எடுத்துச்சென்றாக கிராம மக்கள் குற்ச்சாட்டு  

Posted by வி.ஆர்.ஷங்கர்


u




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பரதூர் கிராமத்தில் ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி கோவில் மற்றும் கோவிந்த ராஜபெருமாள் கோவில்களில் உள்ள ஐம்பொன் மற்றும் செப்பு சிலைகளை கடந்த சனிக்கிழமையன்று காலை பதினோறு மணியளவில் அடையாளம் தெரியாத வாகனத்தில் மர்மநபர்கள் எடுத்து சென்றுவிட்டதாக கிராமக்கள் புகார் மனுவை மாவட்ட ஆட்சித்தலைவர், தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.மேலும் சிலையை மீண்டும் கோவிலுக்கு கொண்டுவந்து வைப்பதற்காக போராட்டம் நடத்தப்போவதாகவும் பரதூர் கிராமமக்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது கிராமங்களில் பாதுகாப்பற்ற நிலைகளில் இருக்கும் கோவில்களின் சிலைகளை பாதுகாப்பாக வைக்குபொருட்டு கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. தற்போது பரதூர் கிராமத்தில் எடுக்கப்பட்ட சிலைகளும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.


முயற்சி முக்கியம்  

Posted by வி.ஆர்.ஷங்கர்

Use my personal link http://apps.yatra.com/yatr31mgv-7y to install Yatra app and register to earn Rs 2000 eCash. Invite your friends using your personal link and earn Rs 1500 eCash per friend.

ஆச்சரிய பரிசு  

Posted by வி.ஆர்.ஷங்கர்

Use my personal link http://apps.yatra.com/yatr31mgv-7y to install Yatra app and register to earn Rs 2000 eCash. Invite your friends using your personal link and earn Rs 1500 eCash per friend.

அடிப்படை வசதியில்லை  

Posted by வி.ஆர்.ஷங்கர்

https://youtu.be/RikqIydqjmU

உயிர்ப்புள்ள கதை  

Posted by வி.ஆர்.ஷங்கர்

ஒரு ஊரில் ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்குக் கண்பார்வை இல்லை. அவனுக்கு வெகு நாட்களாகக் குழந்தையும் இல்லை. ஒரு நாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றான். அப்போது, கரையில் ஒதுங்கிக் கிடந்த பெரிய மீனொன்று அவனைப் பார்த்துக் கெஞ்சியது:

மீனவனே, நான் சாதாரண மீன் இல்லை. கடலில் உள்ள மீன்களுக்கெல்லாம் தலைவன். ஆழ்கடலில் வசிக்கும் நான், ஒரு பெரிய அலையில் சிக்கி இந்தக் கரைப் பகுதிக்கு வந்துவிட்டேன். இப்போது நீந்த முடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன். எனக்கு ஒரு உதவி செய் மீனவனே. என்னை பத்திரமாக ஆழ்கடலுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் உனக்கு ஒரு வரம் தருவேன்.''

மீனவன் அந்த மீனைத் தூக்கி படகில் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகைச் செலுத்திக் கொண்டுபோய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு, என்ன வரம் கேட்பது என்று யோசித்தான். அவனால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. எனவே அவன் சொன்னான்:

மீன்களின் ராஜாவே, நீ சொன்னபடி நான் செய்துவிட்டேன். ஆனால், என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை. வீட்டுக்குச் சென்று மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு நாளை வந்து கேட்கிறேன்.''

மீனும், ""நீ ஒரே ஒரு வரம்தான் கேட்க வேண்டும்''என்று நினைவுபடுத்தி நன்றி கூறிச் சென்றது. மீனவன் வீட்டுக்குச் சென்றான். வீட்டில் பெற்றோரிடமும், மனைவியிடமும் நடந்ததைக் கூறினான். ராஜா மீனிடம் என்ன வரம் கேட்பது என்று ஆலோசித்தான்.

அவனது தந்தை கூறினார்:

மகனே, நாம் நெடுங்காலமாக இந்த ஓட்டைக் குடிசையில்தான் வாழ்ந்து வருகிறோம். நமக்கு ஒரு நல்ல வீடு வேண்டும் என்று ராஜா மீனிடம் கேளேன்...''

அடுத்ததாக அவனது அம்மா சொன்னார்கள்:

மகனே, எனக்குக் கண் தெரியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. என் கண்கள் பார்வை பெற வேண்டும் என்று அந்த மீனிடம் கேள்...''

கடைசியாக மனைவி கேட்டாள்:

நமக்குத் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் நமக்கு ஒரு குழந்தை இல்லை. எனவே, அந்த மீனிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேளுங்கள்.''

மறுநாள், அந்த மீனவன் கடலுக்குச் சென்று ராஜா மீனிடம் ஒரே ஒரு வரம்தான் கேட்டான். அந்த ஒரு வரத்தில் அவன் பெற்றோரின் ஆசையும், அவன் மனைவின் விருப்பமும் நிறைவேறின. அப்படி அவன் என்ன வரம் கேட்டான்?

விடை: என் மகன் கீழே விளையாடிக் கொண்டிருப்பதை, எங்கள் வீட்டு மாடியிலிருந்து என் பெற்றோர் பார்த்து மகிழ வேண்டும்'' என்பதுதான் அவன் கேட்ட வரம்.

நீதி: உங்கள் உடன் வாழ்பவர்களின் மீது உங்களுக்கு ஆழமான அன்பும் அக்கறையும் பாசமும் இருப்பின்.. அந்த எண்ணமானது உங்களை அறியாமலேயே உங்கள் புத்திகூர்மையையும் முடிவொடுக்கும் திறமையையும் இயல்பாகவே வெளிப்படும்.

குழப்பம்  

Posted by வி.ஆர்.ஷங்கர்

*நடராஜன் அறுவை சிகிச்சையில் தொடரும் மர்மங்கள்..! குளோபல் மருத்துவமனை அறிக்கையும் அடுக்கடுக்காக எழும் கேள்விகளும்..!*

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின் நடராஜன் நலமாக உள்ளதாக குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டது.
ஆனால், அவரது அறுவை சிகிச்சைக்காக உறுப்புகள் பெறப்பட்டது மட்டும் மர்மமாகவே உள்ளது. குளோபல் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையும் அதன்மூலம் எழும் கேள்விகளும்...
*குளோபல் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:*
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 30-ந் தேதி கார்த்திக் என்ற இளைஞர் தலைக் காயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருடைய பெற்றோருக்கு நோயாளியின் நிலை குறித்து டாக்டர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.
ஆனால் அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு கார்த்திக்கை அழைத்துச் செல்ல முடிவு செய்து எங்கள் மருத்துவமனைக்கு  அழைத்து வந்தனர்.
அவருக்கு தலைக்காயத்துடன், எலும்பு முறிவு உள்பட வேறு பல காயங்களும் ஏற்பட்டு இருந்தன. தொடர்ந்து அவருக்கு நரம்பியல் நிபுணர்கள் மற்றும் அவசர சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காததால் அவர் அக்டோபர் 3-ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினரிடம் கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றை தானமாக அளிக்கலாம் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறினர்.
அதன்படி அவர்களுடைய குடும்பத்தினரும், “கார்த்திக் இறந்துவிட்டாலும் அவருடைய உறுப்புகளை தானமாக பிறருக்கு வழங்குவதன் மூலம் அவர் உயிர்வாழ்வதாகவே நாங்கள் கருதுகிறோம். எனவே கார்த்திக்கின் கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றை தானமாக அளிப்பதற்கு சம்மதிக்கிறோம்” என்று சம்மதம் வழங்கினர். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அரசு விதிகளின்படி கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் ஆகியவை குளோபல் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டது.
அதில் 43 வயதான தமிழகத்தைச் சேர்ந்த ஆண் நோயாளிக்கு இதயம், 62 வயதான உத்தரப் பிரதேச ஆண் நோயாளிக்கு நுரையீரல், 74 வயதான ஆண் நோயாளிக்கு கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் பொருத்தப்பட்டது.
இவ்வாறு குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
( மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் நடராஜனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. 74 வயது ஆண் நோயாளி என மட்டும்தான் குறிப்பிடப்பட்டிருந்தது.)
இதன் அடிப்படையில்தான், தஞ்சாவூரிலிருந்து கார்த்திக் சென்னை குளோபலுக்கு அழைத்து வரப்பட்டது தொடர்பான சந்தேகங்களும் கேள்விகளும் வலுக்கின்றன.
*இந்த அறிக்கை எழுப்பும் கேள்விகள்:*
1. ஏழை கூலித்தொழிலாளியான கார்த்திக்கின் குடும்பத்தினர், குளோபல் மருத்துவமனையில் வைத்து கார்த்திக்கிற்கு மேல்சிகிச்சை செய்யத் துணிந்தது எப்படி?
2. அதற்கான பண வசதி இல்லாதபோது கார்த்திக்கை குளோபல் மருத்துவமனைக்கு எப்படி அழைத்துச் சென்றனர்?
3. உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற வேட்கையில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால் கல்லீரலும் சிறுநீரகமும் எப்போது கிடைக்கும் என ஏங்கிக் கொண்டிருக்கும் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள அதே குளோபல் மருத்துவமனைக்குச் சென்றது எப்படி?
4. அது எதேச்சையாக நடந்ததா? அல்லது கார்த்திக் திட்டமிட்டு குளோபல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா?
5. அப்படியென்றால் கார்த்திக்கை குளோபல் மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்தது யார்?
6. அப்படி பரிந்துரை செய்தவர், எத்தனையோ மருத்துவமனைகள் இருந்தும் என்ன காரணத்திற்காக குளோபல் மருத்துவமனையை பரிந்துரை செய்தார்? குளோபல் மருத்துவமனையை பரிந்துரை செய்து அங்கு அழைத்து செல்வதால் அவருக்கு என்ன லாபம்?
7. கார்த்திக் உண்மையாகவே மூளைச்சாவு அடைந்தாரா? அல்லது மூளைச்சாவு அடைய வைக்கப்பட்டாரா?
என அடுக்கடுக்காக கேள்விகள் எழுகின்றன.

அரசு செட்டாப்பாக்ஸ்  

Posted by வி.ஆர்.ஷங்கர்

அரசு கேபிள் டிவிக்கு செட் டாப் பாக்ஸ் இலவசம்: யாரும் பணம் கொடுத்து வாங்க வேண்டாம்...

பொதுமக்கள் யாரும் தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை விலை கொடுத்து வாங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், சில உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ் தாங்கள் வழங்குவதாகவும், அதற்காக ரூ. 500 செலுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் இணைப்புத் துண்டிக்கப்படும் என்றும் பொதுமக்களிடம் கூறுவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.
எனவே, பொதுமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவியின் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய இலவச டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் உரிமம் பெற்றுக்கொண்டு அரசு கேபிள் டிவி இணைப்பைத் துண்டித்தும், தனியார் நிறுவனத்துக்கு சாதகமாகவும், பொதுமக்களை அச்சுறுத்தியும், கட்டாயப்படுத்தியும் தனியார் செட்டாப் பாக்ஸ் வாங்க வற்புறுத்துவதாகவும் புகார்கள் வருகின்றன.

அவ்வாறு யாரேனும் செயல்பட்டால் அவர்களின் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதொடர்பான புகாரை 1800 425 2911 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்

தினமுரசு  

Posted by வி.ஆர்.ஷங்கர்

https://www.youtube.com/user/MrVRSHANKAR/about

விஸ்வரூபமெடுக்கும் பாமக  

Posted by வி.ஆர்.ஷங்கர்

42 தொகுதிகளில் #திராவிட_கட்சிகளை பதம் பார்த்த #பாட்டாளி_மக்கள்_கட்சி 20,000 மேல் வாக்கு பெற்ற தொகுதிகள்
1.பாப்பிரெட்டிப்பட்டி 61,521
2.பென்னாகரம் 58,402
3.தருமபுரி 56,727
4.எடப்பாடி 56681
5.ஜெயங்கொண்டம் 52738
6.சோளிங்கர் 50,827
7.மேட்டூர் 49939
8.ஓமலுர் 48721
9.கும்மிடிப்பூண்டி- 43,055
10.விக்கிரவாண்டி 41428
11.சங்ககிரி 37927
12.செய்யார் 37,491
13.குன்னம் 37271
14.விழுப்புரம் 36,456
15.ஆர்க்காடு 35,043
16.புவனகிரி 33,681
17.திருவள்ளூர் 31,935
18.பாலக்கோடு 31,612
19.காஞ்சிபுரம் 30,102
20.சேலம் (மேற்கு) 29982
21.திண்டிவனம் (தனி) 29,848
22.திருத்தணி 29,596
23.விருத்தாச்சலம் 29,340
24.செஞ்சி 28,515
25.திருப்போரூர் 28.125
26.அரூர் (தனி) 27,747
27.வானூர் (தனி) 27,240
28.காட்டுமன்னார்கோவில் (தனி) 25,890
29.மயிலம் 25,714
30.அணைக்கட்டு 24,711
31.வந்தவாசி (தனி) 24,277
32.சிதம்பரம் 24,226
33.உத்திரமேரூர் 24,221
34.ராணிப்பேட்டை 23,850
35.கலசப்பாக்கம் 23,825 
36.ஊத்தங்கரை (தனி) 23,500
37.குறிஞ்சிப்பாடி 22,705
38.செங்கல்பட்டு 20,899
39.கீழ்பெண்ணாத்தூர் 20,737
40.பவானி 20,727
41.உளுந்தூர்பேட்டை 20,233
42.அரக்கோணம் (தனி) 20,130
#மாற்றம் #முன்னேற்றம் #அன்புமணி.........

பாஜகவின் உண்மை முகம்  

Posted by வி.ஆர்.ஷங்கர்

BJP A BIG FAILURE...
By Arunkumar

பாஜகவின் சாயம் வெளுக்க ஆரம்பித்துள்ளது. நல்ல அறிகுறியாக தெரிகிறது.

சுப்பிரமணியன் ஸ்வாமி..
யஸ்வந் சின்ஹா...
குருமூர்த்தி...

சுவாமி மற்றும் குருமூர்த்தி பாஜகவின் ஆஸ்தான ஜால்ரா கோஷ்டிகள்.... சின்ஹா பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர்....

மூணு பேரும் ஒரே மாதிரி சொல்லியிருக்கிறார்கள்.  வேறு யாராவது சொல்லி இருந்தா கூட பக்தாஸ் ஏதாவது புழுகிக்கொண்டு இருப்பாங்க... இப்போ திருடனுக்கு தேள் கொட்டிய கதை. அப்படி என்ன சொல்லியிருக்காங்க...?

" இந்திய பொருளாதாரம்... மீட்க முடியாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது "  என்று.... ஆணித்தரமாக சொல்லிவிட்டார்கள்.

அதிலும் சின்ஹா... இன்னும் ஒருப்படி மேலே சென்று....

1. இது அணைத்து பாஜக தலைவர்களுக்கும் தெரியும். ஆனால் பயத்தில் வாயை திறக்க மறுக்கிறார்கள்.

2. GDP 5.9 வளர்ச்சி என்பது பொய். 2015 யில் மோடி அரசு அறிமுகம் செய்த, பொருளாதாரத்தை கணக்கு செய்யும் புதிய  முறை என்பது ஏமாற்று வேலை. உண்மையில் GDP 3.7 தான். பழைய முறையே சரியான முறை. என்று கிழித்து தொங்க விட்டிருக்கிறார்.... !!!

#Demonetisation படு தோல்வி என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி துப்பிடுச்சு....

#Digital_transaction சுத்தமாக எடுபடவில்லை... படுத்து தூங்கிடுச்சு...

#Make_in_india வெற்றி பெற்றிருந்தால்.... GDP மேலே வந்திருக்கனும். வேலைவாய்ப்பு அதிகரித்து இருக்கவேண்டும். இந்திய கம்பனிகள் பெரிய அளவில் வளர்ச்சி  அடைந்திருக்க வேண்டும். இதில் எதுவுமே நடக்கவில்லை.  மாறாக வேலையிழப்பு அதிகமாகி உள்ளது. இந்த திட்டமும் புஸ் ஆகி விட்டது.

#GST இது தான் பக்தாஸ் சுட்ட வடையிலேயே பெரிய வடை.... இன்னும் 2 அல்லது ௩ மாசத்தில் இதன் யோக்கியதையும் தெரிந்துவிடும்.... கடைசியாக கட்ட GST வரி கட்டவேண்டிய 69 லட்சம் கம்பனிகளில் வெறும் 12 லட்சம் கம்பனிகள் தான் வரி கட்டியுள்ளது. ஆக இதும் பாதி செத்த கணக்கு தான்.

#Black_Money மீட்பு என்று சொன்னானுக.... சுவிஸ் வங்கியில் இவ்வளவு இருக்கு, அவ்வளவு இருக்கு, முழுசா மீட்போம்..அது இது ன்னு கம்பு சுற்றி, கடைசியில் மீட்பதற்கு நிறைய சட்ட சிக்கல் இருக்குன்னு கதையும் விட்டு ஊத்தி மூடிட்டாங்க.

இதுவரை பாஜக அரசு கொண்டு வந்த எந்த திட்டமும்  உருப்படியாக எதையும் சாதிக்க வில்லை என்பது தான் bottom line. தேவையில்லாத ஆணிகலான நீட், புல்லட் ட்ரைன், என்று வெறும் பாவலா மட்டுமே காட்டிக்கொண்டு இருக்கிறது மோடி அரசு என்பது கொஞ்சம் யோசித்தால் தெளிவாகவே புரியும்.

இவர்கள் இன்று பிடித்து தொங்கி கொண்டிருக்கும் ஆதார் அட்டை, FDI, GST, என்று எல்லாமே காங்கிரஸ் கொண்டுவர முற்பட்ட போது கடுமையாக எதிர்த்தவர்களும் இவர்கள் தான்.... ஆனால் இன்று தாங்கள் அறிமுகம் செய்ததை  போல் பெருமை வேறு...!!!

பாஜக மீது மிகவும் நம்பிக்கை வைத்து, ஆக்கபூர்வமான  மாற்றம் வேண்டி இந்த மோடி சர்காருக்கு வாக்களித்து, ஏமாந்து நிற்கும் இளிச்சவாயன்களில் நானும் ஒருவன்.... என்பது தான் அசிங்கம் மற்றும் வேதனை..!!

இனியாவது சுதாரித்து கொள்வோம்.... !!!

முடிந்த மட்டும் பகிருங்கள் நட்புகளே!

செய்திதுளிகள்  

Posted by வி.ஆர்.ஷங்கர்

⭕40 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது இந்தியா

⭕உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தமிழக விவசாயிகள் கைது

⭕மக்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும் -பா.ஜ.க எம்.பி. சத்ருஹன் சின்கா

⭕புதிதாக வரி செலுத்துவோரை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம் - மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி

⭕பயங்கரவாதத்திற்கு சாதி, மதம் இல்லை: துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு பேச்சு

⭕ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன் உற்பத்தியான சரக்குகளை விற்க டிச.31-ம் தேதி வரை அவகாசம் மத்திய அரசு

⭕உத்தரபிரதேசத்தில் கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட தகராறில் சிறுவன் சுட்டுக்கொலை

⭕நடிகை வித்யாபாலன் சென்ற கார் திடீர் விபத்து

⭕ஆதார் அட்டை இல்லை:மாணவனை சரமாறியாக அடித்த ஆசிரியர் கைது

⭕2017 செப்.18 வரை ரூ.3.7 லட்சம் கோடி நேரடி வரி வருவாய் வசூலிக்கப்பட்டுள்ளது: அருண் ஜெட்லி

⭕ராஜஸ்தானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 26 பேர்:போலீசார் அதிர்ச்சி

⭕ஜம்மு-காஷ்மீரில் எல்லைப்பகுதியில் ராணுவ தளபதி பிபின் ராவத்துடன் நிர்மலா சீதாராமன் ஆய்வு

⭕நெரிசல் ஏற்பட்ட ரெயில் நிலையத்திற்கு ஒரேநேரத்தில் 4 ரெயில்கள் வந்தது என அதிகாரி தகவல்

⭕மும்பையில் ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு

⭕ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதியை கொடுக்க முடியாதவர்களுக்கு புல்லட் ரெயில் கனவு சிவசேனா சாடல்

⭕இரட்டை இலை சின்னம் தொடர்பாக முதல்-அமைச்சர் அணி சார்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல்

⭕மும்பையில் ரெயில் நிலைய நடைமேடை மேம்பாலத்தில் நெரிசல் ஏற்பட்டதில் 15 பேர் உயிரிழப்பு

⭕அயோத்தியில் 2 ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டப்படும் பாரதீய ஜனதா அமைச்சர் பேச்சு

⭕ரோஹிங்யாக்கள் விவகாரத்தில் மியான்மரை விமர்சிக்கும் பாகிஸ்தானின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டது

⭕‘80 வயதில் வேலைக்கு விண்ணப்பிக்கிறார்’ என்ற ஜெட்லியின் பேச்சுக்கு யஷ்வந்த் சின்ஹா பதிலடி

⭕டி.டி.வி.தினகரன் கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்தது

⭕ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது ஆந்திராவில் புதிய விதி, அமலுக்கு வந்தது

⭕மத்திய அரசு தவறுகளை சரி செய்யும்’ யஷ்வந்த் சின்ஹா நம்பிக்கை

⭕ஐதராபாத்தில், விமானப்படை விமானம் விழுந்து தீப்பிடித்தது விமானி உயிர் தப்பினார்

⭕நூறு நாள் வேலை திட்டத்துக்கு பட்ஜெட் நிதி ஒதுக்கீடு ரூ.20 ஆயிரம் கோடி உயர்வு

⭕லக்னோ மாநகராட்சி வாக்காளர் பட்டியலில் இருந்து வாஜ்பாய் பெயர் நீக்கம்

⭕பொருளாதாரத்தை சீர்குலைத்ததாக குற்றச்சாட்டு: யஷ்வந்த் சின்ஹாவுக்கு அருண் ஜெட்லி பதிலடி

⭕நிழல் பொருளாதாரம் இந்தியாவில் ஊழலை அதிகரித்துள்ளது உலகளவில் நாட்டின் பெயரையும் கெடுத்துள்ளது- அருண்ஜெட்லி

⭕மணிமண்டப திறப்பு விழாவுக்கு திமுக தலைவரையும் அழைப்பார்கள் என நம்புகிறோம் - பிரபு

⭕ஜெனீவாவில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயற்சி; முதல்-அமைச்சர் பழனிசாமி கண்டனம்

⭕சேலத்தில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு மாணவ மாணவிகளை அழைத்து செல்ல தடை

⭕தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு 20 பேர் உயிரிழப்பு - ராதாகிருஷ்ணன்

⭕பத்திரிக்கையாளர்கள் மீது போலீஸ் தாக்குதல் - வைகோ கண்டனம்

⭕சிவாஜி மணிமண்டபத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைக்கிறார்

⭕எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவு

⭕சிறிய விழாவாக நடத்தி அவமதிக்க வேண்டாம் மணி மண்டபத்தை முதல்-அமைச்சர் திறக்க வேண்டும் நடிகர் பிரபு

⭕‘இந்த அரசின் தலைவிதி ஐகோர்ட்டில் நிர்ணயிக்கப்படும்’ மு.க.ஸ்டாலின்

*உலக செய்திகள்*

⭕ஜப்பான் பாராளுமன்றம் கலைப்பு அடுத்த மாதம் நடக்கிற தேர்தலில் ஷின்ஜோ அபே ஆட்சியை தக்க வைப்பாரா?

⭕போர் பதற்றம் நிலவி வருவதால் மலேசிய மக்கள் வடகொரியா செல்ல தடை

⭕‘ஒபாமா கேர்’ ரத்து விவகாரம் டிரம்ப் புதிய முடிவு

⭕உலகப்புகழ் பெற்ற கவர்ச்சி இதழ் ‘பிளேபாய்’ நிறுவனர் மரணம்

⭕800,000 போதை மாத்திரைகளை கடத்திய ரோஹிங்யா வாலிபர்களை வங்கதேச போலீஸ் கைது செய்தது

⭕வடகொரிய எல்லையில் ரஷ்ய ராணுவம் குவிப்பு கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றம்

⭕நாட்டை விட்டு தப்பியோடிய ஷினவத்ரா துபாயில் இருக்கிறார்; தாய்லாந்து பிரதமர்

⭕தங்கள் நாட்டு மக்கள் வடகொரியா செல்வதற்கு தடை விதித்தது மலேசியா

⭕பிளேபாய் நாளிதழின் நிறுவனர் 91வது வயதில் மரணம்

⭕பாரபட்சமாக பேஸ்புக் செயல்படுவதாக டிரம்ப் குற்றச்சாட்டு: மார்க் சூகர்பெர்க் பதிலடி

நடிகர்கள் அரசியலுக்கு  

Posted by வி.ஆர்.ஷங்கர்

நடிகர்கள் அரசியலுக்கு வந்துதான் மக்கள் சேவை செய்யனும்னு இல்ல நேரடியாகவே  மக்கள் சேவை செய்யலாம்.ஆனா செய்யமாட்டாங்க.ஏன்னா அரசியல்ன்னா ரசிகர்கள பகடையா பயன்படுத்தலாம்.மேலும் நிதிப்பிரச்னையே எப்பவும் இருக்காது.அவ்வப்போது கட்சி நிதின்னு சொல்லி கையேந்தலாம்.தமிழ் பண்பாடு தலைவனுக்கென்று தனி அடையாளமே வைத்துள்ளது. ஆனால் அந்த அடையாளம்கூட தெரியாமல் அரசியலுக்கு வரும் நடிகர் தலைவனுக்குறிய தகுதியே இல்லாமல் தலைவன் என்று அழைக்கப்படுவார்.மற்றும் திரையில் நடிப்பதைவிட மேடையில் சிறிதளவு நடித்தாலே போதும்  ரசிகனை ஏமாற்றிவிடலாம்.ரசிகர்களை வைத்து பலகாரியங்களை சாதிக்கும்போது லாபம் மட்டுமே நடிகருக்கு.நஷ்டம் முழுவதும் ரசிகனுக்கே. அரசியலுக்கு வரேன்னு சொல்லும் நடிகர்கள் துணிவிருந்தால் அரசியலில் இறங்குவதைவிட நேரடியாக மக்கள் சேவை செய்யலாமே.

புவனகிரி எம்எல்ஏ ஆய்வு  

Posted by வி.ஆர்.ஷங்கர்