கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பரதூர் கிராமத்தில் ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி கோவில் மற்றும் கோவிந்த ராஜபெருமாள் கோவில்களில் உள்ள ஐம்பொன் மற்றும் செப்பு சிலைகளை கடந்த சனிக்கிழமையன்று காலை பதினோறு மணியளவில் அடையாளம் தெரியாத வாகனத்தில் மர்மநபர்கள் எடுத்து சென்றுவிட்டதாக கிராமக்கள் புகார் மனுவை மாவட்ட ஆட்சித்தலைவர், தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.மேலும் சிலையை மீண்டும் கோவிலுக்கு கொண்டுவந்து வைப்பதற்காக போராட்டம் நடத்தப்போவதாகவும் பரதூர் கிராமமக்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது கிராமங்களில் பாதுகாப்பற்ற நிலைகளில் இருக்கும் கோவில்களின் சிலைகளை பாதுகாப்பாக வைக்குபொருட்டு கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. தற்போது பரதூர் கிராமத்தில் எடுக்கப்பட்ட சிலைகளும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
This entry was posted
on 5:52 AM
.
You can leave a response
and follow any responses to this entry through the
Subscribe to:
Post Comments (Atom)
.




0 comments