BJP A BIG FAILURE...
By Arunkumar
பாஜகவின் சாயம் வெளுக்க ஆரம்பித்துள்ளது. நல்ல அறிகுறியாக தெரிகிறது.
சுப்பிரமணியன் ஸ்வாமி..
யஸ்வந் சின்ஹா...
குருமூர்த்தி...
சுவாமி மற்றும் குருமூர்த்தி பாஜகவின் ஆஸ்தான ஜால்ரா கோஷ்டிகள்.... சின்ஹா பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர்....
மூணு பேரும் ஒரே மாதிரி சொல்லியிருக்கிறார்கள். வேறு யாராவது சொல்லி இருந்தா கூட பக்தாஸ் ஏதாவது புழுகிக்கொண்டு இருப்பாங்க... இப்போ திருடனுக்கு தேள் கொட்டிய கதை. அப்படி என்ன சொல்லியிருக்காங்க...?
" இந்திய பொருளாதாரம்... மீட்க முடியாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது " என்று.... ஆணித்தரமாக சொல்லிவிட்டார்கள்.
அதிலும் சின்ஹா... இன்னும் ஒருப்படி மேலே சென்று....
1. இது அணைத்து பாஜக தலைவர்களுக்கும் தெரியும். ஆனால் பயத்தில் வாயை திறக்க மறுக்கிறார்கள்.
2. GDP 5.9 வளர்ச்சி என்பது பொய். 2015 யில் மோடி அரசு அறிமுகம் செய்த, பொருளாதாரத்தை கணக்கு செய்யும் புதிய முறை என்பது ஏமாற்று வேலை. உண்மையில் GDP 3.7 தான். பழைய முறையே சரியான முறை. என்று கிழித்து தொங்க விட்டிருக்கிறார்.... !!!
#Demonetisation படு தோல்வி என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி துப்பிடுச்சு....
#Digital_transaction சுத்தமாக எடுபடவில்லை... படுத்து தூங்கிடுச்சு...
#Make_in_india வெற்றி பெற்றிருந்தால்.... GDP மேலே வந்திருக்கனும். வேலைவாய்ப்பு அதிகரித்து இருக்கவேண்டும். இந்திய கம்பனிகள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இதில் எதுவுமே நடக்கவில்லை. மாறாக வேலையிழப்பு அதிகமாகி உள்ளது. இந்த திட்டமும் புஸ் ஆகி விட்டது.
#GST இது தான் பக்தாஸ் சுட்ட வடையிலேயே பெரிய வடை.... இன்னும் 2 அல்லது ௩ மாசத்தில் இதன் யோக்கியதையும் தெரிந்துவிடும்.... கடைசியாக கட்ட GST வரி கட்டவேண்டிய 69 லட்சம் கம்பனிகளில் வெறும் 12 லட்சம் கம்பனிகள் தான் வரி கட்டியுள்ளது. ஆக இதும் பாதி செத்த கணக்கு தான்.
#Black_Money மீட்பு என்று சொன்னானுக.... சுவிஸ் வங்கியில் இவ்வளவு இருக்கு, அவ்வளவு இருக்கு, முழுசா மீட்போம்..அது இது ன்னு கம்பு சுற்றி, கடைசியில் மீட்பதற்கு நிறைய சட்ட சிக்கல் இருக்குன்னு கதையும் விட்டு ஊத்தி மூடிட்டாங்க.
இதுவரை பாஜக அரசு கொண்டு வந்த எந்த திட்டமும் உருப்படியாக எதையும் சாதிக்க வில்லை என்பது தான் bottom line. தேவையில்லாத ஆணிகலான நீட், புல்லட் ட்ரைன், என்று வெறும் பாவலா மட்டுமே காட்டிக்கொண்டு இருக்கிறது மோடி அரசு என்பது கொஞ்சம் யோசித்தால் தெளிவாகவே புரியும்.
இவர்கள் இன்று பிடித்து தொங்கி கொண்டிருக்கும் ஆதார் அட்டை, FDI, GST, என்று எல்லாமே காங்கிரஸ் கொண்டுவர முற்பட்ட போது கடுமையாக எதிர்த்தவர்களும் இவர்கள் தான்.... ஆனால் இன்று தாங்கள் அறிமுகம் செய்ததை போல் பெருமை வேறு...!!!
பாஜக மீது மிகவும் நம்பிக்கை வைத்து, ஆக்கபூர்வமான மாற்றம் வேண்டி இந்த மோடி சர்காருக்கு வாக்களித்து, ஏமாந்து நிற்கும் இளிச்சவாயன்களில் நானும் ஒருவன்.... என்பது தான் அசிங்கம் மற்றும் வேதனை..!!
இனியாவது சுதாரித்து கொள்வோம்.... !!!
முடிந்த மட்டும் பகிருங்கள் நட்புகளே!
0 comments